பாரிசானின் தேர்தல் கொள்ளை அறிக்கை ஏப். 21 இல் வெளியிடப்படும்

ஈப்போ, ஏப்ரல்.19-

பேரா, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனலின் தேர்தல் கொள்கை அறிக்கை வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று பேரா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சாராணி முகமட் தெரிவித்தார்.

பாரிசான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் முகமட் யுஸ்ரி பாகீர் போட்டியிடும் இந்த இடைத் தேர்தலில் கட்சியின் தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து இன்று சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பிரதான கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பின்னர் அது குறித்து வேட்பாளர் டாக்டர் முகமட் யுஸ்ரி பாகீருடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பின்னர் திங்கட்கிழமை தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்படும் என்று டத்தோ ஶ்ரீ சாராணி குறிப்பிட்டார்.

மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் முகமட் யுஸ்ரி பாகீர், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேக் மற்றும் பிஎஸ்எம் வேட்பாளர் பவானி கே.எஸ். ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

WATCH OUR LATEST NEWS