ஜசெக தேர்தல் முடிவு அமைச்சரவை மாற்றத்திற்கு வித்திடாது

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

கடந்த மார்ச் 16 ஆம் தேதி நடைபெற்ற ஜசெக.வின் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தல் முடிவு, வரும் டிசம்பர் மாதம் வரையில் அமைச்சரவை மாற்றத்திற்கு வித்திடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், இன்று மறு உறுதி செய்தார்.

தற்போது ஜசெக.வை பிரதிநிதித்து அமைச்சரவையில் இருப்பவர்கள், வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பர் என்று அவர் குறிப்பிட்டார்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாப்ஃருல் அப்துல் அஸிஸின் செனட்டர் பதவிக் காலம் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதம் அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

அமைச்சரவி மாற்றம் ஏற்படாத வரையில் நடப்பு பொறுப்பாளர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பர் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

தற்போது சட்டத்துறை துணை அமைச்சராக இருக்கும் ஜசெக.வின் முன்னாள் உதவித் தலைவர் எம். குலசேகரன், நடந்து முடிந்த கட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை.

லிம் கிட் சியாங்கின் புதல்வியும், துணை நிதி அமைச்சருமான லிம் ஹுய் யிங் கட்சித் தேர்தலில் தோல்விக் கண்டார்.

WATCH OUR LATEST NEWS