சிங்கப்பூர், ஏப்ரல்.19-
கடல் வழியாக சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று மலேசியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
28 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.05 மணியளவில் சிங்கப்பூர் கடலோர ரோந்துப் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பூலாவ் சாரிம்புன் தீவில் அடையாளம் தெரியாத ஒரு படக்கின் மூலம் அந்த மூன்று மலேசியர்களும் சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளதாக சிங்கப்பூர் கடலோரப் போலீசார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.