காணாமல் போன முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்

ரவூப், ஏப்ரல்.19-

பகாங், ரவூப், டோங், ஜெராம் பெசு பொழுது போக்கு பூங்காவில் உள்ள ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போன முதியவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.

மூன்று நாட்களாகக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 63 வயதுடைய அந்த முதியவரைத் தேடும் பணியில் தீயணைப்பு, மீட்புப் படையினர் மற்றும் பொது தற்காப்புப் படையினர் ஈடுபட்டு வந்தனர்.

எனினும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த முதியவர், மீன் பிடிக்கும் இடத்திலிருந்து 20 மீட்டர் தூரத்தில் ஆற்றில் மிதக்கக் காணப்பட்டார்.

மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அந்த முதியவர் நீரின் வேகத்தில் நிலைத் தடுமாறி விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS