மூசாங் கிங் டுரியான் பழத் தோட்டக்காரர்கள் விவகாரம்: மத்தியஸ்தராகச் செயல்பட ஜசெக விருப்பம்

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லாவின் கவன ஈர்ப்பாக அமைந்த பகாங் மாநில அரசுக்கும், ரவூப் மூசாங் கிங் டுரியான் பழத் தோட்டக்காரர்களுக்கு இடையிலான நில அத்துமீறில் விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண்பதற்கு மத்தியஸ்தராகச் செயல்பட பகாங் மாநில ஜசெக விருப்பம் தெரிவித்துள்ளது.

பகாங் மாநில சட்டமன்றத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து சுல்தான் அப்துல்லா ஆற்றிய உரைக்கு, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ஜசெக., ரவூப்பில் மாநில அரசுக்குச் சொந்தமான நிலங்களில் கடந்த 20, 30 ஆண்டுகளாக அனுமதியின்றி டுரியான் மரங்கள் நடவு செய்யப்பட்டு இருப்பதை ஒப்புக் கொண்டது.

அதே வேளையில் ரவூப்பில் நடவு செய்யப்பட்ட மூசாங் கிங் டுரியான் தொழில்துறை அனைத்துலக அளவில் முக்கிய ஒரு சின்னமாக பரிணாமித்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று ஜசெக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நில விவகாரம் தொடர்பான சர்ச்சையை பகாங் மாநில அரசுடன் நல்ல முறையில் தீர்த்துக் கொள்வதற்கு ரவூப்பில் உள்ள டுரியான் மரங்கள் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் தயாராக இருப்பதாக மாநில ஜசெக தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS