கூனிங், ஏப்ரல்.19-
மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சரான டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி, இன்று தனது சொந்த ஊரான சரவாக், கூச்சிங்கில் உள்ள விஸ்மா செபாத்தியில் ஹரிராயா பொது உபசரிப்பை வெகுசிறப்பாக நடத்தினார்.
இந்த பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்பித்தார். பிரதமர் பிற்பகல் 1.40 மணியளவில் வருகை தந்தார். உடன் சரவாக் முதலமைச்சர் டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபேங்கும் கலந்து கொண்டார்.
பிரதமர் அன்வாரும், சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரியும் சுமார் அரை மணி நேரம் செலவிட்டனர்.