அமெரிக்க விசா நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை

புத்ராஜெயா, ஏப்ரல்.19-

மலேசியர்களுக்கான அமெரிக்கா விசா மற்றும் குடிநுழைவு விதிமுறை நடைமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று விஸ்மா புத்ரா விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும் அமெரிக்காவிற்குச் செல்கின்ற அல்லது அங்கு வசிக்கின்ற மலேசியர்கள் அந்நாட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க, அனுசரித்து நடப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று விஸ்மா புத்ரா தெளிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவதாக வெளிவந்துள்ள தகவல்களுக்கு மத்தியில் விஸ்மா புத்ரா இந்த உறுதி மொழியைத் தந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS