பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.19-
கோலாலம்பூரில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த முன்னாள் தேசிய பெருநடை வீரர் ஜி. சரவணனுக்கு பிரதமர் நிதி உதவி வழங்கினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 50 கிலோமீட்டர் தூரம் கொண்ட பெருநடைப் போட்டியில் மலேசியாவின் பெயரை உலக அரங்கில் மணக்கச் செய்தவரான சரவணன், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நரம்பியல், தசை பலவீன நோயினால் பாதிக்கப்பட்டு, நிற்கக் கூட முடியாமல் அவதியுற்று வருகிறார்.
இதனை அறிந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் பாஃர்ஹான் பௌஸி மூலம் நிதி உதவியை வழங்கினார். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணனை நேரில் சென்று சந்தித்த டத்தோ அஹ்மாட் பஃர்ஹான் உடல் நிலை குறித்து கேட்டறிந்ததுடன் நிதிஉதவியையும் வழங்கினார்.