கோலாலம்பூர், ஏப்ரல்.19-
இன்று மிகவும் பரபரப்பாக நடைபெற்ற கூட்டரசு பிரதேசம், கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் தொகுதி பிகேஆர் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தோல்விக் கண்டார்.
ஐந்து முனைப் போட்டியில் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான சரஸ்வதி கந்தசாமிக்கு 683 வாக்குகள் கிடைத்தன.
தொகுதி தலைவராக அன்வார் பாவான் சிக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 807 வாக்குகள் கிடைத்தன. இரண்டாவது இடத்தைப் பெற்ற சரஸ்வதி கந்தசாமிக்கு 683 வாக்குகளும், மூன்றாவது இடத்தை பெற்ற செல்வமலர் கணபதிக்கு 664 வாக்குகளும், கடைசி இடத்தைப் பெற்ற கிஷோர் குமார் சந்திரனுக்கு 32 வாக்குகளும் கிடைத்தன.
இந்த வாக்களிப்பில் மொத்தம் 2,202 பேர் கலந்து கொண்டனர்.