ஈப்போ, ஏப்ரல்.20-
பேரா, சுங்காய் அருகே பாலம் இடிந்து விழுந்ததில், ஹாட் ஸ்பிரிங் பெல்டா சுங்கை கிளா, கம்போங் திசோங், புயோங் மாஸ் சஞ்சுவரி கேம்ப் சைட் சுங்கை கிளா ஆகிய பகுதிகளுக்கானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இச்சம்பவத்தால், சுல்தான் அஸ்லான் ஷா பொலிடெக்னிக் மாணவர்கள் 81 பேர் உட்பட மொத்தம் 136 பேர் இன்று சிக்கித் தவித்தனர்.
பேரா மாநிலத் தீயணைப்பு – மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபாரொட்ஸி நோர் அஹ்மாட் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து காலை 10.46 மணிக்கு தமது தரப்புக்குத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டார். மாற்றுப் பாதையைப் பயன்படுத்த் அவர்களை வெளியே கொண்டு வர மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக சபாரொட்ஸி தெரிவித்தார்.