வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண ஆட்சிக் குழு உறுப்பினருக்கு உத்தரவு

ஷா ஆலாம், ஏப்ரல்.20-

ஷா ஆலம், தாமான் ஶ்ரீ மூடாவில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிமை சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருடின் ஷாரி அறிவுறுத்தியுள்ளார். ஆயர் கூனிங் இடைத்தேர்தலுக்காக பரப்புரைப் பணிகளில் தீவிரமாக இருக்கும் அமிருடினிடம் ஓரிக்கை மனுவை சமர்ப்பிக்க தாமான் ஶ்ரீ மூடா, புக்கிட் கெமுனிங், பத்து லாப்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

திடீர் வெள்ளம் காரணமாக தாமான் ஶ்ரீ மூடா குடியிருப்பாளர்களின் கவலையையும் பதட்டத்தையும் தான் புரிந்து கொள்வதாகவும், 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரிய வெள்ளம் மீண்டும் நிகழாமல் இருக்க, நீண்ட கால தீர்வு விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும். அதே சமயம், மத்திய அரசு உட்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது என்றார். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களைச் சந்திப்பது உட்பட உடனடி நடவடிக்கைகளை இஸாம் கண்டறிவார் என்று அமிருடின் மேலும் கூறினார்.

இந்த பிரச்சனை கவனமாக கையாளப்படுவதையும், விரும்பத்தகாத சம்பவங்கள் முறையாக கையாளப்படுவதையும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பாதிப்புகளை குறைப்பதையும் மாநில அரசு உறுதி செய்யும் என்றார். தொடக்கக் கட்ட நடவடிக்கையாக, ஷா ஆலம் மாநகர் மன்றம் நீர்ப்பாசனம், வடிகால் துறை உட்பட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு கூட்டத்தை அவரது அரசியல் செயலாளர் சைபுஃடின் ஷாஃபி நடத்துவார் என்று அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS