மாணவிக்குப் பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

அலோர் ஸ்டார், ஏப்ரல்.21-

மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக நம்பப்படும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு சீன தனியார் இடைநிலைப்பள்ளியான கியாட் ஹுவாவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் தடுக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரின் வக்கிரச் செயல் குறித்து, தெரியவந்ததைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்வதற்கு சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை, பள்ளி மேலாளர் வாரியம் அமைத்துள்ளது.

அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதை, போலீஸ் துறை தங்களுக்குத் தெரியப்படுத்தியதாக பள்ளி மேலாளர் வாரியம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS