ஜோகூர் பாரு, ஏப்ரல்.21-
எம்பிவி வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரும் புதிருமாக மோதியதில் அக்காளும், தம்பியும் உயிரிழந்தனர். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 9.50 மணியளவில் ஜோகூர்பாரு, உலு திராம் அருகில் பெஃல்டா உலு தெப்ராவில் நிகழ்ந்தது.
20 வயது பெண்ணும், அவரின் 15 வயது தம்பியும் ஜாலான் டேலாங்கில் இருந்து பெஃல்டா உலு தெப்ராவை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹய்மி தெரிவித்தார்.