பட்டர்வெர்த், ஏப்ரல்.21-
பினாங்கில் பெய்த கனத்த மழையில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வட செபராங் பிறையில் பெனந்தி மற்றும் தானா லியாட் முதலிய பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் அடங்கும்.
நேற்று நள்ளிரவு பெய்யத் தொடங்கிய மழை, இன்று அதிகாலை வரை நீடித்ததாக பொது தற்காப்புப் படை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த திடீர் வெள்ளததில் பல வீடுகளில் முழங்கால் உயரம் வரை நீரின் மட்டம் உயர்ந்தாக தெரிவிக்கப்பட்டது.