கோலாலம்பூர், ஏப்ரல்.21-
கேளிக்கை மையத்தில் ஜுஸ் வடிவிலான போதைப் பொருளை உட்கொண்டு இருந்த கோலாலம்பூர் மாநகருக்கு உட்பட்ட ஒரு போலீஸ் நிலையத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார்.
தாம் உட்கொண்ட பானம், போதைப் பொருள் கலந்தது என்பதை அந்த போலீஸ் நிலையத் தலைவர் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்ததைத் தொடர்ந்து அவர், அவ்விடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
மிதமான இன்ப அதிர்வைத் தரக்கூடிய மிக ஆபத்தான போதைப் பொருளான Amphetamine, Methamphemine மற்றும் கெத்தாமின் ஆகிய போதைப் பொருட்களை அவர் உட்கொண்டு இருப்பது சிறு நீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அந்த கேளிக்கை மையத்தில் 43 வயதுடைய போலீஸ் நிலையத் தலைவரை புக்கிட் அமான் சிறப்பு போலீஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.