ஆசியான் மாநாட்டின் போது பிடிபிஆர் கல்வி முறை அமல்படுத்தப்படலாம்

கெப்பாலா பாத்தாஸ், ஏப்ரல்.21-

ஆசியான் தலைவர் என்ற முறையில் அந்த உச்சநிலை மாநாடு நடைபெறும் மே மாதம் மற்றும் அக்டோபர் மாதம் காலகட்டத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்து ஓன்லைன் மூலம் கல்விப் பயிலும் பிடிபிஆர் கல்வி முறை அமல்படுத்தப்படலாம் என்று கல்வி அமைச்சர் பாஃட்லீனா சீடேக் தெரிவித்தார்.

எல்லாப் பள்ளிகள் என்ற நிலை இல்லாமல் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டுமே பிடிபிஆர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் போது வெளிநாட்டுத் தலைவர்கள் வருகையினால் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். பல சாலைகள் மூடப்படலாம். மாணவர்கள் அவதியுறுவதைத் தவிர்க்க அவர்கள் ஓன்லைன் மூலன் வீட்டிலிருந்து கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகள் செய்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக பாஃட்லீனா சீடேக் தெரிவித்தார்.

ஆசியான் தலைவர்கள் வருகையின் போது, தலைவர்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலைகளில் உள்ள பள்ளிகள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே இந்தத் திட்டத்தை அமல்படுத்க்ஹ கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS