காகித முறையிலான வாக்களிப்பில் மக்கள் இன்னமும் நம்பிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.21-

பொதுத் தேர்தலில் டிஜிட்டல் முறையிலான வாக்களிப்பை விட காகித முறையிலான வாக்குச் சீட்டு முறையில் மக்கள் இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆரின் முன்னாள் துணைத் தலைவர் வான் அஹ்மாட் வான் ஓமார் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவான AI மற்றும் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவதை விட காகித முறையிலான வாக்குச் சீட்டு, வெளிப்படையானது என்பதுடன், தவறுகள் அல்லது சந்தேகங்களை உடனடியாக சரிபார்த்துக் கொள்வதற்கு ஓர் ஆதாரப் பொருளாக நம் கண் முன்னே உள்ளது என்று நாட்டின் பொதுத் தேர்லுக்கு பல முறை முன்னிலை வகித்தவரான வான் அஹ்மாட் குறிப்பிட்டார்.

நவீன தொழில்நுட்ப முறை அவசியம்தான். ஆனால், அந்த நவீன தொழில்நுட்ப முறையை எந்தெந்த விவகாரத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு நமக்கு வேண்டும். மலேசியா போன்ற ஒரு சிறிய நாட்டில் ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தொடர்ந்து பேண தேர்தல் முறையில் காகித வடிவிலான வாக்குச் சீட்டு பாதுகாப்பானது மற்றும் நம்பகமானதாகும் என்று வான் அஹ்மாட் பரிந்துரைக்கிறார்.

WATCH OUR LATEST NEWS