கம்போடிய ஆடவருக்கு 40 ஆண்டு சிறை

புத்ராஜெயா, ஏப்ரல்.21-

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சிலாங்கூரில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் இரண்டு பெண்களையும், இரண்டு சிறார்களையும் கொலை செய்த குற்றத்திற்காக கம்போடிய ஆடவருக்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று 40 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அந்த நபருக்கு அப்பீல் நீதிமன்றம் விதித்த 60 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்த கூட்டரசு நீதிமன்றம், அந்த தண்டனையை 40 ஆண்டுகளாகக் குறைத்தது.

40 வயதுடைய உசுஃப் மல்தி என்ற அந்த கம்போடியப் பிரஜைக்குக் குறைக்கப்பட்டுள்ள 40 ஆண்டு கால சிறைத் தண்டனை, அவர் பிடிப்பட்ட தினமாக கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற கூட்டரசு நீதிபதி ரொட்ஸாரியா புஜாங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த ஆடவர், கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி இரவு 7.25 மணியளவில் கோலலங்காட், Telok Panglima Garang, Kampung Sijangkang- கில் நான்கு கொலைகளை செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS