ஜோகூர் பாரு, ஏப்ரல்.21-
ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடியின் வரைப்படம், பிறைச் சின்னமின்றி முழுமையற்ற நிலையில் பிரசுரிக்கப்பட்டது தொடர்பில் முன்னணி சீனப் பத்திரிக்கையான சின் சியூ டெய்லி நாளிதழில் ஆசிரியர் மற்றும் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டது, சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கையாகும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் விளக்கினார்.
இத்தகையக் குற்றத்திற்கு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸ் துறைக்கு அதிகாரம் உள்ளது என்று டத்தோ பாஃமி விளக்கினார்.
தேசியக் கொடியின் வரைப்படம், முழுமையற்றத் தோற்றத்தில் பிரசுரமாகியிருப்பது, பொது மக்களின் கோபத்திற்கு வித்திட்டுள்ளது.
இக்குற்றம் தொடர்பில் உள்துறை அமைச்சு, போலீஸ் துறை மற்றும் தொடர்பு, பல்லூடக ஆணையம் என மூன்று தரப்பினர் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.