வத்திகன் சிட்டி, ஏப்ரல்.21-
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88. போப்பாண்டர் பிரான்சிஸின் உயிர், இன்று திங்கட்கிழமை காலை 7.35 மணியளவில் பிரிந்ததாக வத்திகன் (Vativcan) அறிவித்தது.
போப்பாண்டவர் பொறுப்பை வகித்த முதல் லத்தீன் அமெரிக்கரான பிரான்சிஸ், 12 ஆண்டுகளாக போப்பாண்டவர் பொறுப்பை வகித்தார். பிரான்சிஸ் பல சுகாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் பதவிக் காலத்தில் அதிகப் பதற்றம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.