கோலாலம்பூர், ஏப்ரல்.21-
அடுக்கு மாடி வீட்டில் 12 வயது சிறுமி ஒருவர், ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, கம்போங் பத்து, ஜாலான் அம்பாட் டின், பத்து மூடாவில் நிகழ்ந்தது.
அந்த சிறுமியின் இறப்பு திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அந்த சிறுமி எவ்வாறு விழுந்தார் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் சுகார்னோ முகமட் ஸாஹாரி தெரிவித்தார்.