அலோர் ஸ்டார், ஏப்ரல்.21-
வட மலேசிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் மரணம் தொடர்பில் 2 பேருந்து ஓட்டுநர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
சிந்தோக்கில் உள்ள ஜாலான் பெர்சியாரன் பெர்டானா பேருந்து நிறுத்தத்திற்கு முன் இவ்விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் வட மலேசிய பல்கலைக்கழக மாணவியான 22 வயதுடைய மனாரினா ஹஸ்யா முகமட் கரீம் என்பவர் மரணமடைந்ததாக குபாங் பாசு போலீஸ் தலைவர் ரட்ஸி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
இவ்விபத்தில் தொடர்பாக இரண்டு பேருந்து ஓட்டுநர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். பேருந்தை ஓட்டி வந்த 37 வயது நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடைய இவ்விபத்து குறித்து புலன் விசாரணை செய்வதற்கு அந்த பல்கலைக்கழகம் தனிப்பட்ட முறையில் 2 சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது.