கோலாலம்பூர், ஏப்ரல்.21-
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவு உலகிற்கு பேரிழப்பாகும். அவரின் மறைவு, கிறிஸ்துவர்களை மட்டுமின்றி உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாக டத்தோ ஆரோன் அகோ டகாங் குறிப்பிட்டார்.
உலகில் ஏழ்மை நிலை, அகதிகள் பிரச்னை, சமூகவியல் நீதி உட்பட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களுக்காக போப்பாண்டவர் பிரான்சிஸ் மிக அமைதியாக போராடி வந்தவர் ஆவார் என்று அமைச்சர் வர்ணித்தார்.