இன்னமும் ஆய்வில் உள்ளது – அஸாலினா கூறுகிறார்

புத்ராஜெயா, ஏப்ரல்.21-

பிரதமர் பதவியை இரண்டு தவணைக் காலமாக மட்டுப்படுத்துவது மற்றும் அரசியல் தொடர்பான சில விவகாரங்கள் சம்பந்தப்பட்ட உத்தேசச் சட்டத் திருத்தங்கள் இன்னமும் ஆய்வில் இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.

இவ்விரு உத்தேசச் சட்டத் திருத்தங்களில் மத்திய அரசாங்கம் மட்டுமின்றி மாநில அரசாங்கங்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் பதவிக்கான தவணைக் காலத்தை 10 ஆண்டுகளாக மட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சீர்திருத்தங்களுக்கு கடந்த மார்ச் மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS