பாலர் பள்ளிக்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள் ஆசிரியர்களிடம் கொள்ளை

சபா பெர்னாம், ஏப்ரல்.22-

பாலர் பள்ளிக்குள் நுழைந்த ஆயுதமேந்திய மூன்று கொள்ளையர்கள், இரண்டு ஆசிரியர்களைப் பாராங் முனையில் மடக்கி, கொள்ளையிட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று காலை 9.50 மணியளவில் சிலாங்கூர், சபா பெர்னாம், பாசீர் பஞ்சாங், தாலி ஆயர் 11, இல் நிகழ்ந்தது. சம்பவம் நிகழும் போது அந்த பாலர் பள்ளியில் பத்து மாணவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த பெண் ஆசிரியர்களை அச்சுறுத்திய கொள்ளையர்கள், இரண்டு தங்கச் சங்கிலிகள் ஒரு கைப்பேசி ஆகியவற்றைக் கொள்ளையடித்ததுடன், ஆசிரியர் ஒருவரை இரு பக்கம் கன்னத்திலேயே அறைந்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிர்ஷ்வசமாக எந்தவொரு மாணவரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS