நீதிபதிகளின் நியமனத்தில் பிரதமர் பங்களிப்பு தொடர வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.22-

நீதித்துறை நியமனங்கள் ஆணையத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும் நீதிபதிகள் நியமிக்கப்படும் விவகாரத்தில் பிரமருக்கு இருக்கும் பங்களிப்பு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று முன்ளாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹாமிட் முகமட் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதிகள் நியமனங்கள் மீது மாமன்னருக்கு ஆலோசனை வழங்குவதிலும், ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்தின் 4 உறுப்பினர்களை நியமிப்பதிலும் பிரதமர் ஆற்றும் பங்கினை நீக்குவது என்பது நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்காது என்று துன் அப்துல் ஹாமிட் குறிப்பிட்டார்.

3 உயர் நிலை நீதித்துறை நிர்வாகிகள், கூட்டரசு நீதிமன்றத்தின் ஒரு மூத்த நீதிபதி ஆகியோருடன் தலைமை நீதிபதியும் ஆணையத்தில் உறுப்பினர்களாக இடம் பெற்றிருக்கும் நிலையில் பிரதமரின் பங்களிப்பு நீக்கப்படுவது தலைமை நீதிபதியின் சர்வாதிகாரத்திற்கு வழி வகுத்து விடும் என்று துன் அப்துல் ஹாமிட் எச்சரித்துள்ளார்.


பிரதமர் பங்களிப்பின்றி அந்த ஆணையம் சுயேட்சையாக முடிவு எடுக்கும் போக்கிற்கு அனுமதித்தால், கேள்வி கேட்க யாரும் இல்லை என்று கருதி அந்த ஆணையத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை நீதிபதிகளான நியமிக்கப்படும் அபாயமும் இருப்பதாக துன் அப்துல் ஹாமிட் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS