மலேசியா – சீனா இலவச விசா முறை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்

புத்ராஜெயா, ஏப்ரல்.22-

மலேசியாவிற்கு வருகை புரியும் சீன நாட்டு மக்களுக்கான இலவச விசா முறை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தற்போது மலேசியா வழங்கியுள்ள சீன நாட்டு மக்களுக்கான இலவச விசா முறைக்கான காலக்கெடு முடிவடைந்ததும், இந்த சலுகை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்ற அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் சுற்றுப் பயணிகளாக வருகின்ற சீனப் பிரஜைகள் இலவச விசாவில் 90 நாட்கள் வரையில் மலேசியாவில் தங்கியிருக்க முடியும் என்று டத்தோஸ்ரீ சைபுஃடின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS