பள்ளிகளில் தமிழ், மாண்டரின் மற்றும் ஆசியான் மொழிகள் – ஒரு தேர்வு மொழியாக போதிக்க கல்வி அமைச்சு உத்தேசம்

கோலாலம்பூர், ஏப்ரல்.22

ஆசியான் நாடுகளுக்கு இடையே தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு மலேசியப் பள்ளிகளில் தமிழ், மண்டரின் மற்றும் ஆசியான் மொழிகளை ஒரு தேர்வு மொழியாக போதிப்பதற்கு கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளதாக அதன் அமைச்சர் பாஃட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

ஆசியான் நாடுகளுக்கு இடையில் விரிவான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக தாய்லாந்து, கம்போடியாவின் கெமர் மற்றும் வியட்நாம் ஆகிய மொழிகளைப் போதிப்பது இதில் அடங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆசியானின் பலம் என்பது அதன் பன்முகக் கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தில் உள்ளது. இத்தகையத் தனித்துவமானக் கலாச்சாரத்தை பள்ளிகளில் புகுத்துவது மூலம் புதிய தலைமுறையினர் பன்மொழி ஆற்றல் பெற்றவர்களாகக் குறிப்பாக ஆசியான் வட்டார மொழிகளை அறிந்தவர்களாக திகழ்வர் என்று பாஃட்லீனா குறிப்பிட்டார்.

வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஆசியான் வட்டாரத்தில் பல வேலைகள் இயந்தரமாகி விடும். 60 விழுக்காடு வேலை வாய்ப்புகள் இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு இருக்கும்.

இந்நிலையில் தமிழ் மற்றும் மாண்டரின் மொழிகளுடன் ஆசியான் மொழிகளையும் நமது மாணவர்கள் கற்றுக் கொள்வது அவர்களின் எதிர்காலத்தை மேலும் சிறக்க வைக்கும் என்று பாஃட்லீனா நம்பிக்கைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS