கைகலப்பு – ஐந்து ஆடவர்கள் கைது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.22-

அண்மையில் டமான்சாராவிக் உள்ள ஒரு பேரங்காடியில் நடைபெற்ற சொங்க்ரான் புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் ஐந்து ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாபாஃர் தெரிவித்துள்ளார்.

இந்த கைகலப்பு தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவர், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

நீர் விளையாட்டின் போது விளையாட்டுத் துப்பாக்கிகளில் நீரை நிரப்புவதில் ஏற்பட்ட போட்டாப் போட்டி, பின்னர் கைகலப்பாக மாறியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஷாருல்நிஸாம் ஜாபாஃர் தெரிவித்தார்.

நீர் விளையாட்டு நடந்து கொண்டிருந்த வேளையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை அறிக்கை ஒன்றைத் திறந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS