ஆயர் கூனிங் இடைத் தேர்தல் – முன்கூட்டியே வாக்களிப்பு

தாப்பா, ஏப்ரல்.22-

பேரா, தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வேளையில் முன்கூட்டியே வாக்களிப்பு இன்று நடைபெற்றது.

போலீஸ்துறை, இராணுவம் உட்பட அன்றைய தினம் கடமையாற்றும் பாதுகாப்புப் படையினருக்காக நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பில் பிற்பகல் 3 மணி வரை 90.80 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது.

முன்கூட்டியே வாக்களிக்கும் வாக்காளர்களுக்காக இரண்டு வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. பீடோரில் போலீஸ் பொது நடவடிக்கைப் பிரிவு முகாமின் டேவான் ரெக்ரியாசி பெகாவாய் கானான் மண்டபத்திலும், தாப்பா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் டேவான் அங்கேரிக் மண்டபத்திலும் வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டதாக எஸ்பிஆர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS