ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.22-
கடந்த வாரம் மாது ஒருவரின் கைப்பையைப் பறித்து சென்று, வழிபறியில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆடவர் ஒருவர் ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
25 வயது A. தினேஷ் என்ற அந்த ஆடவர், நீதிபதி ஜூரைய்டா அப்பாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் ஜார்ஜ்டவுன், ஜாலான் கோல கங்சார் சாலையோரத்தில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஓர் இந்தோனேசிய மாதுவான நோவிதா பட்ஜிவிற்குச் சொந்தமான ஆயிரம் ரிங்கிட் ரொக்கம், கிரேடிட் கார்டு, ஐபோன் ஆகியவற்றைக் கொள்ளையிட்டதாக தினேஷிற்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.