மே 5 ஆம் தேதி மக்களவையின் சிறப்புக் கூட்டம்

புத்ராஜெயா, ஏப்ரல்.22-

மலேசியாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள வரி விவகாரம் தொடர்பில் விவாதிப்பதற்கு வரும் மே 5 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

சிறப்புக் கூட்டம் நடைபெறுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிபடுத்தியுள்ளார். இந்த சிறப்பு மக்களவைக் கூட்டத்திற்கான நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை இன்னும் பெறவில்லை என்று தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அறிவித்த கூடுதல் வரி விதிப்பில், மலேசியாவிற்கான வரியை , 24 விழுக்காடாக உயர்த்தியுள்ளார். இந்த வரி விதிப்பில் ஆசியான் நாடுகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த வரி விதிப்பின் அமலாக்கத்தை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS