காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

புதுடெல்லி, ஏப்ரல்.22-

சுற்றுலாத் தலமான காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜம்மு – காஷ்மீரின் ஆனந்த் நாக் மாவட்டத்தின் பஹல்காமின் பைசாராம் பகுதியில் இயற்கை அழகைச் சுற்றுலா பயணிகள் ரசித்து கொண்டு இருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தத். மதியம் 2:30 மணியளவில் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்து உள்னர்.

இச்சம்பவத்தில் வெளிநாட்டினர் இருவர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்த ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS