கோலத் திரங்கானு, ஏப்ரல்.22
சுக்மா விளையாட்டு வீராங்கனை ஒருவரைப் பாலியல் பலவந்தம் புரிந்த குற்றத்திற்காக முன்னாள் உதவிப் பயிற்றுநருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத் தண்டனையை கோலத் திரங்கானு உயர் நீதிமன்றம் இன்று உறுதிச் செய்தது.
62 வயது மாட் சால்லே ஜலானி என்ற அந்த முன்னாள் உதவிப் பயிற்றுநர், தனக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி செய்து கொண்ட மேல்முறையீட்டை நீதிபதி ஹாசான் அப்துல் கானி நிராகரித்தார்.
சம்பந்தப்பட்ட உதவிப் பயிற்றுநர், 6 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவரின் மேல்முறையீட்டில் தகுதிபாடுயில்லை என்று அவர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.