பினாங்கு மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நீர் விநியோகத் தடை

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.22-

பினாங்கு மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பினாங்கு வாசிகள் 24 மணி நேரம் முதல் 60 மணி நேரத்திற்குத் தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்ளும்படி பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கே. பத்மநாபன் கேட்டுக் கொண்டார்.

செபராங் பிறை உத்தாரா, செபராங் பிறை தெங்கா மற்றும் திமோர் லாவுட் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 24 மணி நேரம் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மூன்று மாவட்டங்களிலும் நீர் விநியோகக் கணக்கை வைத்திருக்கும் 3 லட்சத்து 41 ஆயிரத்து 708 பயனீட்டாளர்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 683 பேர் அல்லது 40 விழுக்காட்டினர் இந்த நீர் விநியோகத் தடையை எதிர்நோக்குவர் என்று டத்தோ பத்மநாபன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS