வீட்டு வாடகைப் பணம் வியாழக்கிழமை கொடுக்கப்படும்

ஷா ஆலாம், ஏப்ரல்.22-

சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட 396 குடும்பங்களுக்கு மூன்று மாதத்திற்கான வீட்டு வாடகைப் பணம் வரும் வியாழக்கிழமை சிலாங்கூர் மாநில அரசு பகிர்ந்து அளிக்கும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

வாடகைப் பணத்தைப் பெறுவதற்கு தகுதிப் பெற்ற குடும்பங்களுக்கு மாதத்திற்கு 2 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும். இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்ட குடும்பங்களின் தலைவர்களிடம் இந்த வாடகைப் பணம் சேர்ப்பிக்கப்படும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

வரும் வியாழக்கிழமை அழைக்கப்படும் 396 குடும்பத் தலைவர்களுக்கு இது குறித்து விளக்கம் அளித்தப் பின்னர் வாடகைப் பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று மந்திரி பெசார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS