புத்ராஜெயா, ஏப்ரல்.22-
அண்மையில் மலேசியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட சீன அதிபர் ஸீ ஜின்பிங்கிற்கு தனிப்பட்ட முறையில் தாம் வழங்கிய நினைவுச் சின்ன விவகாரத்தைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.
கடல் நாகம் வடிவில் வழங்கப்பட்ட அந்த நினைவுச் சின்னம் தொடர்பில் நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அந்தோணி லோக், கலை வேலைப்பாடு மிக்க அந்தச் சின்னம், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதையும் அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்.
சீன அதிபருக்கு அந்த நினைவுச் சின்னம் தாம் தனிப்பட்ட முறையில் வழங்கியதே தவிர அரசாங்கம் சார்பில் அல்ல என்று ஜசெக பொதுச் செயலாளரான அந்தோணி லோக் விளக்கினார்.