மலேசிய கினி நிருபர் நந்தகுமார் பணிக்குத் திரும்பினார்

கோலாலம்பூர், ஏப்ரல்.22-

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் ஏஜெண்டு ஒருவரிடம் 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் மலேசிய கினி செய்தித் தளத்தின் முதன்மை செய்தியாளர் B. நந்தகுமார், சுமார் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

நந்தகுமாருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டு வந்துள்ள குற்றச்சாட்டைக் கடுமையாகக் கருதிய மலேசிய கினி, அலுவலக அளவில் சுயேட்சை விசாரணைக் குழு மூலம் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்டது. அதே. அதே வேளையில் இந்த விசாரணை முடிவுறும் வரையில் அவரை பணியிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்தது.

எனினும் நந்தகுமார், குற்றம் இழைத்ததற்கான எந்தவோர் ஒழுக்க மீறலையும் புரியவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS