பெந்தோங், ஏப்ரல்.22-
நாட்டின் பிரதானச் சுற்றுலாத் தலமான கெந்திங் ஹைலேன்ஸில் கைகலப்பில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட மூன்று வெளிநாட்டவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
32 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் கெந்திங் ஹைலேன்ஸ் உதவிப் போலீஸ்காரர்களால் கைது செய்யப்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் காஹார் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் கைகலப்பில் ஈடுபடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அந்த சுற்றுலாத் தலத்தில் தங்குவதற்கு ஹோட்டல் அறைக்கு 1,500 ரிங்கிட் செலுத்தியப் பிறகும் தங்களுக்கு அறை கிடைக்காததால் எழுந்த அதிருப்தி, பின்னர் கைகலப்பில் முடிந்ததாக ஸைஹாம் முகமட் காஹார் விளக்கினார்.