பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.23-
கனத்த மழையின் காரணமாக பெட்டாலிங் ஜெயா, தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள ஓர் அனைத்துலகப் பள்ளியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்களும், பணியாளர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் நடந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்து தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் மற்றும் ஶ்ரீ ஹர்தாமாஸ் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைந்தனர்.
15 வீரர்கள் அவ்விடத்தைச் சோதனை செய்ததில் யாரும் இடிபாடுகளில் சிக்கவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது. எனினும் தடுப்பு சுவர் வளாகத்தில் நிறுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் சேதமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.