சிலாங்கூரில் சில இடங்களில் திடீர் வெள்ளம்

ஷா ஆலாம், ஏப்ரல்.23-

இன்று அதிகாலையில் கொட்டித் தீர்த்த கனத்த மழையில் சிலாங்கூர் மாநிலத்தில் சில மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

சுங்கை பூலோ, பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா ஆகியவை திடீர் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் அடங்கும் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப்படை இலாகாவின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இந்த வெள்ளத்தில் 86 வீடுகள் பாதிக்கப்பட்டன. யாரும் நிவாரண மையங்களுக்கு இடம் மாற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

சுங்கை பூலோவில் கம்போங் பாயா ஜெராஸ் ஹிலிர் பகுதியில் 80 வீடுகள் பாதிக்கப்பட்டன. வீடுகளில் முழுக்கால் வரையில் வெள்ளம் உயர்ந்து காணப்பட்டது.

இதே போன்று கம்போங் பாரு சுங்கை பூலோவில் 6 வீடுகள் பாதிக்கப்பட்டன. வெள்ளம் வடியத் தொடங்கியதால் யாரும், வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இல்லை என்று அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS