ஷா ஆலாம் வட்டார மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ஷா ஆலாம், ஏப்ரல்.23-

தற்போது பெய்து கொண்டு இருக்கும் கனத்த மழையில் ஷா ஆலாம் வட்டாரத்தில் சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அவ்வட்டார மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஷா ஆலாம் வட்டாரத்தில் குறிப்பாக செக்‌ஷன் 13, செக்‌ஷன் 7 மற்றும் தாமான் ஸ்ரீ மூடா போன்ற பகுதிகள் மிகத் தாழ்வான பகுதிகளாக விளங்குவதால் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஷா ஆலாம் மாநகர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS