இரும்புக் கடையில் 22 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

கோலாலம்பூர், ஏப்ரல்.23-

கோலாலம்பூர், சுங்கை பெசியில் உள்ள உலோக மற்றும் மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்றில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் வேலை பெர்மிட் ஆவணமின்றி வேலை செய்து வந்ததாக நம்பப்படும் 22 அந்நியத் தொழிலார்களைக் கைது செய்துள்ளனர்.

பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்கும் அந்த தொழிற்சாலையை கடந்த இரண்டு வார காலமாக உளவுப் பார்த்து வந்த தங்கள் அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையை மேற்கொண்டதாக மலேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

இந்த திடீர் சோதனையில் 23 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய 18 இந்தியப் பிரஜைகளும், 4 வங்களாதேசப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் வேலை பெர்மிட் ஆவணங்களைச் சோதனையிட்டதில் 12 இந்தியப் பிரஜைகள் மட்டுமே செல்லத்தக்க வேலை பெர்மிட்டைக் கொண்டு இருந்ததாக டத்தோ ஸாகாரியா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS