கார் தடம் புரண்டதால் சிறுமி மரணம்

ஜோகூர் பாரு, ஏப்ரல்.23-

ஜோகூர் பாரு, ஜாலான் ஹாட்டா 5, தாமான் ஹாட்டா ஹைட்ஸ் என்ற இடத்தில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் 5 வயது சிறுமி ஒருவர் மரணமுற்றார். மேலும் இருவர் காயமடைந்தனர்.

நேற்று இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், மூன்று நபர்கள் பயணம் செய்த பெரோடுவா மைவி ரக கார், கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள் விபத்தில் சிக்கிய மூன்று பேரை மீட்டதாக அதன் செயல்பாட்டுத் தலைவர் இஸ்வான் அப்துல்லா தெரிவித்தார்.

இதில் 24 வயது ஆடவர் மற்றும் 23 வயது பெண் காயமுற்றனர். அவர்கள் காரின் முன்பக்கத்தில் சிக்கிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமுற்றாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS