சண்டக்கானில் தீ: 21 வீடுகள் அழிந்தன

சண்டக்கான், ஏப்ரல்.23-

சபா, சண்டக்கானில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் 21 வீடுகளும், ஒரு கிடங்கும் அழிந்தன. இத்தீ விபத்தில் இருவர் தீக்காயங்களுக்கு ஆளானதாக சண்டக்கான் தீயணைப்பு, மீட்புப்படை இலாகா தலைவர் ஜஸ்ரி அப்துல் ஜால் தெரிவித்தார்.

கம்போங் பத்து பூத்தேவில் நீர் நிலைகள் மீது கட்டப்பட்ட வீடுகளில் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு, கொழுந்து விட்டு எரிந்தது.

அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டியத் துணியுடன் தப்பிக்க முற்பட்டதால் அவர்களால் எந்த உடமையையும் மீட்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS