நடிகரை விசாரணைக்கு அழைத்தது போலீஸ்

ஷா ஆலாம், ஏப்ரல்.23-

தனது காதலியை அடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் நடிகர் ஒருவரை போலீசார் விரைவில் விசாரணைக்கு அழைக்கும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, ஆரா டாமன்சாராவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி போலீசார் புகார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நடிகருக்கு எதிராக இதே போன்ற புகாரை அந்தப் பெண், கடந்த ஆண்டிலும் செய்துள்ளார் என்று குறிப்புகள் காட்டுவதாக டத்தோ ஹுசேன் ஓமார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS