கோலாலம்பூர், ஏப்ரல்.23-
மலேசிய போக்குவரத்துத் துறையில் நில அடையாளமாக ரயில் சேவையை வழங்கி வரும் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை கேடிஎம்பி நிராகரித்தது.
முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர் ஜோன்சன் பெர்னாண்டஸ் முன் வைத்துள்ள அந்தப் பரிந்துரை ஏற்கத்தக்கது அல்ல என்பதுடன் அதற்கான அவசியமில்லை என்று கேடிஎம்பி அறிவித்துள்ளது.
மலாயன் ரயில்வே பெர்ஹாட் என்பது மிகப் பழையப் பெயராக இருக்கிறது என்றும் நவீன சூழலுக்கு கேடிஎம்பி தனது பெயரை மாற்ற வேண்டும் என்றும் அந்த மூத்த ஆசிரியர் பரிந்துரை செய்து இருந்தார்.