சுங்கை பட்டாணி,
மாணவர்களிடையே தேசப்பற்றை விதைப்பதற்கு பள்ளிச் சீருடையில் தேசிய கொடியின் சின்னத்தை அணியும் நடைமுறை, பாலர் பள்ளியிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் பரிந்துரை செய்துள்ளார்.
இள வயதிலேயே மாணவர்களிடம் தேசப் பக்தியை விதைப்பதற்கு இந்த நடைமுறை பெரிதும் உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது பள்ளி மாணவர்களிடையே, தேசப்பற்றை விதைக்கும் இந்த நடைமுறை தொடங்கப்பட்டு இருந்தாலும், அது மழலையர் பள்ளியிலிருந்து தொடங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று டத்தோ ஆரோன் அகோ டகாங் குறிப்பிட்டார்.
அரசாங்கப் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகள், தொழில் பயிற்சிக் கழகங்கள், ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள் முதலியவற்றில் தேசியக் கொடிச் சின்னத்தை அணியும் நடைமுறை வரவேற்கத் தக்கதாகும் என்று டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.