செனாய், ஏப்ரல்.24-
ஜோகூர், செனாய், தாமான் டேசா இடாமானில் இன்று நிகழ்ந்த மிகப் பெரிய தீ விபத்தில் ரசாயனப் பொருட்களைச் சேமித்து வைத்திருக்கும் தொழிற்சாலை ஒன்று கடுமையாகச் சேதமுற்றது.
இன்று பிற்பகல் 2.13 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் தீயின் கோரம் கடுமையாக இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்த 34 வீரர்கள் முழு வீச்சில் போராடியதாக பண்டார் பாரு கூலாய் தீயணைப்பு நிலைய ஒருங்கிணைப்பாளர் முகமட் பாஃவ்ஸி அவாங் தெரிவித்தார்.
தீயை அணைப்பதற்கு இரண்டு கொள்கலன் லோரிகள் மற்றும் 6 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.