கோலாலம்பூர், ஏப்ரல்.24-
கிளந்தான் மாநிலத்தில் பாலியல் பலவந்தம், தகாத உறவு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இருப்பதாக அண்மையில் போலீசார் வெளியிட்ட அறிக்கையினால் பாஸ் கட்சி உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி தெரிவித்தார்.
போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை மற்றும் கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகமட் யூசோப் மாமாட் அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தைப் பாஸ் தலைமையிலான கிளந்தான் அரசாங்கம் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.
மாறாக இத்தகையச் சமூகச் சீர்கேடுகளைக் களைவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்செயல்களைக் குறைப்பதற்கு நிவாரணம் தேட வேண்டும் என்று புவாட் ஸர்காஷி வலியுறுத்தினார்.